May 3, 2020
தண்டோரா குழு
கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள மளிகை மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் மதியம் ஒரு மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்ட சில்லறை மளிகைக் கடைகாரர்கள் இங்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கிச் செல்கிறார்கள்.மேலும் கோவை மாநகர மக்களும் இங்கு உள்ள கடைகளுக்கு வந்து தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.தற்போது குரானா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு அறிவித்துள்ளது.ஆனால் ரங்கே கவுண்டர் வீதிக்கு அதிக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கேள்விக் குறியாகியுள்ளது.எனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளனர்.
அதன்படி ரங்கேட் கவுண்டர் வீதிக்கு சரக்கு வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் முதலில் தங்கள் கொண்டு வரும் சொந்த அல்லது வாடகை ஆட்டோ ராஜவீதி தேர்முட்டி ரோட்டில் வரிசையாக நிறுத்தி வைக்க வேண்டும்.பின்பு தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்த வியாபார கடையில் பில் போட்டு அந்தப் பில்லை ராஜ வீதியில் நிற்கும் போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்துவிடவேண்டும்.அவர் வரும் பில்களை வரிசைப்படுத்தி வைத்துக் கொள்வார் பின்பு நான்கு நான்கு வண்டி களாகர் ரங்கே கவுண்டர் வீதியின் வலது இடதுபுறம் அனுப்பி வைப்பார்.இதனால் கடைக்கு வீதிக்கு வரும் வியாபாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சமூக இடைவெளியும் பின்பற்றி எளிதாக பொருட்களை ஏற்றிச் செல்ல முடிகிறது. இத்திட்டம் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரிதும் பயனளிப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.