May 11, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரனா அச்சத்தால் அத்தியாவிசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு பிற கடைகள் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இன்று முதல், 34 வகை கடைகளை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த கடைகளை திறக்கலாம் என்ற பட்டியலையும், அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா நோய் அதிகம் பரவிய பகுதிகள் தவிர,பிற பகுதிகளில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டன.அதன் வாயிலாக, நோய் பரவல் அதிகரிக்கிறதா என, கண்காணிக்கப்பட்டு வந்தது.அதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில்,ஊரடங்கு கட்டுப்பாடுகளை, மேலும் தளர்த்த,அரசு முன்வந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமின்றி, பிற தனிக் கடைகளை திறக்கவும், அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் டீக்கடைகள்,பேக்கரிகள் உணவகங்கள் பார்சல் வழங்கவும்,பூ, பழக்கடைகள், கட்டுமான பொருட்கள்,சிமென்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் திறக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடிபடையில் கோவை ராஜவீதி,செட்டி வீதி பகுதியில் மளிகை கடைகள் மட்டுமே அதிகளவில் திறக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள கடைகளில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்துகிறது.ஊரடங்கு தளர்த்தப்பட்டலும் மக்களிடம் இன்னும் கொரனா அச்சம் இருப்பதால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.