கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென ஆலோசனை நடத்தினார்.
கோவை பாரதியார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் யாரையும் அழைக்காமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் தனிச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர்கள் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.
அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி குறித்து கேட்டறிந்த ஆளுநர்பன்வாரிலால் புரோகித், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்றும், வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்னும் எவ்வளவு நிதி தேவை என்றும் கேட்டதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித் கோவை மாவட்ட அரசுஅலுவலகங்களைப் பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு