• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக 59 மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி

April 18, 2021 தண்டோரா குழு

மறைந்த நடிகர் விவேக்கிற்கு கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவரின் நினைவாக 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.

பிரபல நகைச்சுவை நடிகரும்,மரங்கள் நடும் ஆர்வலரும் ஆன நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். தமிழகம் மட்டுமின்றி பெரும் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் படி கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக அதன் தலைவர் சாகுல் தலைமையில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆத்துப்பாலம் பாப்புலர் வளாகத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குட்டிப்புலி பிரபல நடிகர் ராஜசிம்மன், நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு,விஜய் மக்கள் இயக்க மாணவரணி தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மறைந்த நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தியடைய அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சின்னக்கலைவாணர், நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரங்கள் நடும் பணியை அனைத்து இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தொடரும் வகையில்,அவரது 59 வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக அந்த வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.

கோவை மாவட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் ஜெயன்,பூபேஷ்,மற்றும் உபைதுர் ரஹ்மான், உமர், முஜி, ஜலீல், பாபுகான் மற்றும் வெண்ணிலா ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க