• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம்

June 19, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக கோவை மாவட்ட கழக நிர்வாகிகள், நகர ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்,கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலை குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க