• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கோவை சரக விவாதிப்பு கூட்டம்

November 7, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்குக்கான கூடுதல் தலைமை இயக்குநர் (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று கோவை சரக விவாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இவ்விவாதிப்பு கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்,திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை சரக காவல் அதிகாரிகளுக்கு கோவை சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும், கணிணி வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தக்க நிவாரணம் பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சட்ட விரோதமாக விற்கப்படும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கை பேணவும்
நல்வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

மேலும், கோவை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்களில் திருட்டு போன பொருட்களை மீட்டு உரிய நபர்களிடம் உரிய நேரத்தில் ஒப்படைத்தும், வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்த 40 காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்களின் பணியினை பாராட்டி அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்குக்கான கூடுதல் தலைமை இயக்குனர் வழங்கி பாராட்டினார்.

மேலும் படிக்க