• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதோர் ஆர்ப்பாட்டம்

March 12, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதோர் இன்று ஆர்ப்பாத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதவர்கள்,38 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் மத்திய மாநில அரசுகள் எங்களை கண்டு கொள்ளாததால் எங்களுக்கு மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பு கிடைக்காத அவல நிலை தொடர்கிறது.

மேலும் இது பற்றி தகவல் கேட்டாலும் 1 மாதம் கழித்துவா என இழுத்தடிக்கின்றனர். பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் இதுநாள் வரை காது கேளாதோருக்கு வேலை அளிக்காதது ஏன்? நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் குடும்பம் உள்ளது நாங்களும் வாழக்கை நடத்த வேண்டும். எனவே எங்களுக்கு உரிய முறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மத்திய மாநில அரசு வேலைகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் நாங்கள் எங்கள் உரிமைகளை பெற தொடர் போராட்டங்கள் நடத்தி இறுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க