• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

November 29, 2021 தண்டோரா குழு

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தனது மகள்களை ஆபாசமாக பேசி, அடிப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ். போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவருக்கும், அற்புதராஜ்-க்கும் இடப்பிரச்சனை எழுந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், அற்புதராஜை அடித்தும்,தகாத வார்த்தைகளில் பேசியும் ஜார்ஜ் குப்புசாமி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.மேலும், அற்புதராஜின் 8 வயது மகள்களை அடித்தும், தகாத வார்த்தைகளிலும் பேசியுள்ளார்.இது தொடர்பாக அற்புதராஜ் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 15ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அற்புதராஜ் இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

அங்கு தான் மறைத்து வைத்திருந்த, பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அற்புதராஜை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் சிறுமிகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க