• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிகவினர் மனு

August 28, 2020 தண்டோரா குழு

கோவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் தலைமையில் வழங்கப்பட்ட அம்மனுவில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொகுதி வாரியாக உரிய சுகாதார பணியாளர்கள் நியமித்து அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மேற்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தேவையான அனைத்து ஒத்துழைப்பும்
நல்கி கொரோனா நோயை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்.கொரோனா பாதிக்கப்பட்ட தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை முழுமையாக மூடவேண்டும் என்ற ஆணையை மறுபரிசீலனை செய்யுமாறும்
COVID-19 -ஆல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை உரிய பாதுகாப்புடன்தனிமைப்படுத்தப்பட்டு எஞ்சியுள்ள தொழிலாளர்களை வைத்து நிறுவனங்களையும்,தொழிற்சாலைகளையும் உரிய சமூக இடைவெளி பாதுகாப்புடனும், மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொடர்பான வழிமுறைகளையும் பின்பற்றி நிறுவனங்களை நடத்தி மற்ற தொழிலாளர்களின்
வாழ்வாதாரங்களையும்,நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின்நலன்களையும் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்குமாறும் பணிவுடன் வேண்டுகிறோம் என மனுவில் கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்க