June 20, 2020
தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் துவக்கி வைத்தார்.இதன் பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,முக கவசங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கபட்டது.
இது குறித்து ஒருங்கிணைபாளர்கள் கூறுகையில்,
கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று ஆட்டோக்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் உக்கடம், கரும்புகடை, குனியமுத்தூர், ஆத்துபாலம், சுந்தராபுரம்,செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளபட இருப்பதாக தெரிவித்தனர். இன்று மட்டும் ஐயாயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்க உள்ளதாகவும் மூவாயிரம் முக கவசங்கள் வழங்க உள்ளதாகவும் மேலும் தேவைபடும் மக்களுக்கு விநியோகம் செய்யபட உள்ளதாகவும் அப்போது தெரிவித்தனர்.