• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி துவங்கியது

May 16, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகத்திலும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி இன்று துவங்கியது.

1421 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிவானது கோவை வடக்கு,கோவை ற்கு,சூலூர்,மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி,வால்பாறை உள்ளிட்ட அனைத்து அலுவலகத்திலும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது.இதில் பட்டா மாறுதல்,நிலத்திற்கான எல்லை அளத்தல்,வயதோர்க்கான உதவி தொகை போன்ற வருவாய் துறைக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவிற்க்கு தீர்வு காணும் விதத்தில் ஜமாபந்திக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அவர்கள் துவக்கி வைத்தார்.இதில் அதிமுக மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் துணை தாசில்தார்கள்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.இதன் பின் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் படிக்க