• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 723 மாணவ, மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்

March 1, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 723 மாணவ, மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் இராசாமணி பார்வையிட்டார்.

தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இன்று முதல் வருகின்ற 19 ம் தேதி வரை தேர்வுகள்
நடைபெறுகின்றன. இன்று தமிழ் மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 116 மையங்களில் நடைபெறும் தேர்வில் 348 பள்ளிகளில் இருந்து 35 ஆயிரத்து 723 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு 208 ஸ்கிரைபுகளும் நியமிப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஆர்.கே.ஸ்ரீ.ரங்கம்மாள் பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மாணவர்கள் சிரமமின்றி எழுதுவதற்காக சரியான நேரத்தில் பேருந்து வசதி, மையங்களில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க