• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 3072 வாக்குச்சாவடிகளில் 470 பதற்றமானவை – மாவட்ட ஆட்சியர் தகவல்

March 11, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 3072 வாக்குசாவடிகளில் 470 பதற்றமானவை என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியானதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அனைத்து கட்சி பிரதிநிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர் படங்கள், விளம்பர பலகைகள் நாளை காலைக்குள் அகற்றப்படும்.அம்பேத்கர், காந்தியடிகள், திருவள்ளுவர் சிலைகளை தவிர்த்து மற்ற சிலைகள் மூடப்படும், பிளாஸ்டிக் தடை தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது எனவே தேர்தல் பரப்புரையின் போது பிளாஸ்டிக் பேனர்கள், கொடிகள் மற்றும் தோரணங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் 8 மணி நேரம் என சுழற்சி முறையில் 24 மணி நேரத்திற்கு 9 பறக்கும் படைகள் என 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளாத பட்சத்தில் பறிமுதல் செய்யப்படும். அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ், சிவக்கு விளக்கு, நீல விளக்கு என அனைத்து வாகனங்களும் சந்தேகம் ஏற்பட்டால் சோதனை செய்யப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 1950 இலவச எண் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 3072 வாக்குச்சாவடிகளில் 470 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 117 மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகளும் உள்ளது.இங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்படும் என்றார்.

மேலும், சமூக வலைதளங்கள், ஊடகங்கள் ஆகியவைகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கபட்டுள்ளதாகவும் 13 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை கமிஷ்னர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க