• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 53 போலீசாருக்கு சான்றிதழ்

October 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்-4, உதவி ஆய்வாளர்கள்-15, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்- 2, தலைமை காவலர்-7, முதல் நிலைக் காவலர்-6, காவலர்கள்-20 என மொத்தம்-53 நபர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் படிக்க