• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்களே அதிகம்

January 31, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியில் வெளியீடு, ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்களே அதிகம்

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) துரை. இரவிச்சந்திரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

கோவையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. பெயர் சேர்த்தல் , நீக்கம், திருத்தம் ஆகியவை கடந்த செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அக்டோபர் இறுதி நாள் வரைக்கும் அரசு அலுவலகங்களில் படிவங்கள் பெறப்பட்டது. மேலும் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அதன்பின்னர் அதன் தீவிர விசாரணை பின்பு இறுதி வாக்காளர் பட்டியல் விடப்பட்டதாக மாவட்ட பொறுப்பு ஆட்சியர் பட்டியலை வெளியிட்டார். மக்கள் பார்வைக்கு கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி, நகராட்சி ஆகிய அலுவலகங்களில் வைக்கப்படும் அலுவலக நேரங்களில் பார்வையிடல்லாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய மொத்த வாக்காளர் எண்ணிக்கை 28 இலட்சத்து 61 ஆயிரத்து 961 பேர் உள்ளனர்.

இதில், ஆண்கள் 14 இலட்சத்து 17 ஆயிரத்து 683 பேர்.பெண்கள் 14 இலட்சத்து 43 ஆயிரத்து 967 பேர்.. மூன்றாம் பலினத்தார் 311 பேர் உள்ளனர்.

மேலும் படிக்க