• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி

April 5, 2023 தண்டோரா குழு

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன் துவக்க விழா காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

“COPஅவள்” என்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை துவக்கி வைத்து நிகழ்ச்சி உரையாற்றினார்.

அப்போது முதல் கட்டமாக கோவை மாநகர தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 150 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில்,கோவை மாநகர் ஆயுதப்படை காவல்துறை ஆணையர் முரளிதரன், தலைமையிட காவல் துணை ஆணையர் சுகாசினி ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க