• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர காவல் துறை மற்றும் நேரு கல்வி குழுமங்கள் சார்பில் காவல் வீர வணக்க நாள் நிகழ்ச்சி

October 16, 2019 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறை மற்றும் கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் பொதுமக்களின் உயிர் காக்க தன் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறையின் சட்டம் மற்றும் ஓழுங்கு உதவி ஆணையாளர் (தெற்கு) ஜெ. செட்ரிக் மானுவேல் கலந்து கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியதாவது. தேசிய அளவில் அக்டோபர் 21 – ஆம் நாள் காவலர் வீர வணக்க நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பணியின்போது உயிர்நீத்த காவலருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டுக்காக காவலர்கள் பாடுபட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை, வழிப்பறி என நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க போராடும்போது காவல்துறையினருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் நேரிடுகிறது. எனவே பணியின்போது மறைந்த காவல்துறையினருக்கு இன்று வீர வணக்க நாள் நமது நேரு கல்லூரியின் சார்பில் கடைபிடிக்கப்படுவது மிகவும் பெருமையாக உள்ளது. உயிர்நீத்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு எங்கள் கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோவை மாநகர காவல் துறையின் சட்டம் மற்றும் ஓழுங்கு துணை ஆணையாளர் செட்ரிக் மானுவேல் பேசுகையில்,

நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக காவலர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினர், உடல் நலம் மற்றும் உணவு ஆகியவற்றை தியாகம் செய்து நம்மை பாதுகாக்கிறார்கள். நாம் ஒவ்வொரு வார விடுமுறையையும் பண்டிகை விடுமுறையையும் மகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறோம். ஆனால் காவலர்கள் அந்த நாட்களில் இருமடங்கு பணிபுரிந்து மக்களை பாதுகாக்கிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது மற்றும் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பது போன்ற சவாலான வேலைகளை செய்யவேண்டியுள்ளது. பொது மக்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற சில நேரங்களில் சாலைமறியல் செய்வார்கள் அவர்களை சமாதனம் செய்து சாலை போக்குவரத்தை சீர் செய்யும் பணி மிகவும் கடினமானதாகும். மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 5 வருடமாவது மத்திய மாநில அரசின் பாதுகாப்பு துறை பணியில் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையானது சுமார் 7.21 கோடி ஆனால் காவல் துறையினரோ 1.2 லட்சம் மட்டுமே. இவர்களை வைத்துதான் 7.21 கோடி மக்களை காப்பாற்ற வேண்டியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்றால் 7.21 கோடி பேரில் 1 சதவீதம் பேர் தான் கிரிமினல்கள். இந்த கிரிமினல்களை கண்கானித்தாலே போதுமானது. கிரிமினல்களை தவிர்த்து மீதமுள்ள நல்ல குடிமக்களால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றது. பொது மக்கள் அரசுக்கும் காவல் துறைக்கும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் அனைவரும் இதே போல் காவல் துறையில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி வேலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விழாவில் நேரு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசியரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

மேலும் படிக்க