• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பிளேடால் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி

November 6, 2019 தண்டோரா குழு

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பிளேடால் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் ராஜவீதி பகுதியில் உள்ள டி.கே மார்க்கெட்டில் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது குடும்பச் சொத்து பத்திரத்தை மோகன்ராஜின் மனைவியின் உறவினர் ராம்குமார் அடமானமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வைத்துள்ளார். மேலும் 5 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைப்பதாக சொல்லி 30 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். இந்த தகவல் அறிந்த மோகன்ராஜ் கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் மோசடி புகார் அளித்தார்.

ஆனால் மோசடி புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த மோகன்ராஜ் இன்று மீண்டும் மாநகர குற்றப்பிரிவில் புகார் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பிளேடால் கழுத்து கை என மூன்று பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் படிக்க