• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் வெளியீடு

December 21, 2018 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக இப்படி நடைபெறும் விபத்துக்களால் இறப்பவர்கள் சாலை விதிகளை மதிக்காததே காரணம் என ஆய்வுகளில் தெரிய வருகிறது. ஆகவே சாலை
விதிகளை மதித்து தங்கள் உயிரையும் உடமையையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை பந்தய சாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரியும் மகேஸ்வரன் சாலை விதிகளை மதிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “மதிக்கனும் மதிக்கனும்” என்ற பாடலை தயாரித்து உள்ளார். இந்த பாடலை கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் ஐபி எஸ், போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர். பாலாஜி சரவணன் ஆகியோர் வெளியிட்டனர்.

மேலும் படிக்க