October 16, 2020
தண்டோரா குழு
பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வடவள்ளி மண்டலத் தலைவர்
வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட ஓபிசி அணி தலைவர் சுதாகர், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா, ஓபிசி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் காயத்ரி, ரம்யா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை ஓபிசி அணி வடவள்ளி மண்டல் தலைவர் மனோஜ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், இக்கூட்டத்திற்கு வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மரக்கன்று வழங்கி நிர்வாகிகளை அறிமுகம் செய்து விழாவை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்.