• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகரில் உள்ள அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய பல்சமய கிறிஸ்மஸ் இன்னிசை விழா

November 30, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய பல்சமய இன்னிசை விழா டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் பேராலயத்தில் நடைபெற்றது.

கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கோவை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், C. S. I கோவை திருமண்டல போதகர்கள், E.C.C. உதவி தலைவர் Rev. Dr. கருணாகரன், T. E. L. C முன்னாள் பேராயர். REV DR.எட்வின் ஜெயக்குமார்,பெந்தேகோஸ்தே சபைகளின் பிரதம பேராயர் REV.DR.டேவிட் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும்,விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முத்து சிவ ராமசாமி அடிகளார், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி முன்னாள் தலைவர் அப்துல் ஜாப்பர், கோவை குருத்துவாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங்,ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் வழக்கறிஞர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்னிசை பாடல்கள், கிறிஸ்துமஸ் பாடல்கள் கிறிஸ்து பிறப்பு நாடகம் மற்றும் நடனங்கள், திருச்சபைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு பாராட்டி சென்றனர்.

மேலும் படிக்க