August 31, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி புதிய ஆணையராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத், தமிழக வேளாண் துறை துணை செயலராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து,கோவை மாநகராட்சி ஆணையராக சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) பி.குமரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி ஆணையராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது கோவையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர மக்களின் ஒத்தழைப்பு தரவேண்டும் என ஆணையர் வலியுறுத்தினார்.