• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று 60.39 சதவீதமாக உள்ளது

May 19, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று 60.39 சதவீதமாக உள்ளது. கடந்த வாரம் 67 சதவீதம் வரை அதிகரித்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்து உள்ள நிலையில், தொற்றுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும்
நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 60.39 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில்
வசிக்கின்றனர்.இதற்கு அடுத்து சூலூர் பகுதியில் 9.79சதவீதம் பேர் உள்ளனர்.கோவை மாநகராட்சிக்கு அடுத்து சூலூர் பகுதியில்தான்
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மாவட்டத்திலேயே தொற்று பாதிப்பு குறைந்த இடமாக வால்பாறை உள்ளது. இங்கு 0.29சதவீதம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க