• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி கமிஷனர் மாற்றம்

June 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனராக குமாரவேல் பாண்டியன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் குமாரவேல் பாண்டியன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமூக நலத்துறை இயக்குனர் அந்தஸ்தில் (பொறுப்பில்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கோவை மாநகராட்சி கமிஷனராக, சென்னை பெருநகர மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனராக பதவி வகித்த ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை கோவை மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க