• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 20 அதிவிரைவுப் படைகள் அமைப்பு

July 1, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த,பிரத்தி யேகமாக 20 அதிவிரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர், மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் கூறுகையில்,

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நான்கு படைகள் செயல்படும். அவர்கள், அந்தந்தப் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள மக்களை கண்காணிக்கவும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கண்காணிப்பார்கள். ஆகவே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.மேலும் பொதுமக்கள் தாங்கள் அதிவிரைவு படையின் கண்காணிப்பில் இருப்பதை உணர்ந்து,கோவை மாநகராட்சிக்கு, கொரோனா வைரஸ் தடுக்க போதிய ஒத்துழைப்பை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க