February 19, 2019
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக J. ஸ்ரவன் குமார் ஜடாவத் IAS பொறுப்பேற்றார்.
கோவை மாநகராட்சி புதிய ஆணையராக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரவன் குமார் ஜடாவத் பதவியேற்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் பேசுகையில்,
நான் எலக்ரானிகஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளேன். 2014 ஆம் ஆண்டு IAS தேர்வில் 52 ரேங்க் கில் வெற்றிபெற்றேன். பின்னர் வெங்கையா நாயுடு தலமையிலான அமைச்சரவையில் அர்பன் டெவலப்மெண்ட் டிப்பார்மெண்டில் பனியாற்றினேன். பின்னர் திருப்பூர் உதவி கலக்டராகவும் பணியாற்றி இன்று கோவை மாநகராட்சி ஆணையாளராக பொறுபேற்றுள்ளேன்.கோவையை பொருத்தமட்டில் எழில்மிகு கோவை என்பது தான் இலக்கு பொதுசுகாதாரம்,சுற்றுப்புற தூய்மையில் கவனம் செலுத்தப்படும். மேலும் பொதுமக்களின் புகார்கள் அனைத்தும் விரைவாக தீர்வுகாணப்படும் என்றார்.
மேலும் ஊடக துறை நண்பர்களும், பத்திரிக்கையாளர்களும். குறைகள் எதுவாயினும் நேரில் சந்தித்து பேசலாம், அது எனது பணியை சிறப்பாக செய்ய உதவியாக இருக்கும். என்று கூறினார்.