• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மருத்துவர் டாக்டர் R பாலமுருகனுக்கு மருத்துவ நட்சத்திரம் சிறப்பு விருது

September 5, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ராம்நகரில் அமைந்துள்ளது கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை. இம் மருத்துவமனையின் முதுநிலை சர்க்கரை நோய் மருத்துவர் டாக்டர் ஆர் பாலமுருகன் அவர்களுக்கு மருத்துவ நட்சத்திரம் என்னும் சிறப்பு விருதை வழங்கியுள்ளது. இந்த விருதை இவருக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் ஆகஸ்ட் 29, 2024 மாலை 5.00 மணிக்கு கோவை சிறிய சர்ச் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த விருதினை வழங்கினார்.

இந்த மருத்துவ நட்சத்திரம் விருதைப் பெற்றுக் கொண்ட டாக்டர் ஆர் பாலமுருகன் கூறும்போது :-

இது போன்ற விருதுகள் எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கு மருத்துவ சேவையாற்ற பெரிதும் உற்சாகப்படுத்தும். இந்த விருது எங்களை மென்மேலும் ஊக்குவித்து மருத்துவப் பணிகளை முழு ஆர்வத்துடனும், வேகத்துடனும் செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் நிதி செயளாலர் டாக்டர். கார்த்திக் பிரபு, மாநில செயளாலர் டாக்டர். அப்துல்ஹாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க