• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தலைமறைவு

December 7, 2018 தண்டோரா குழு

கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 பெண் குழந்தைகளைக் கொன்று தலைமறைவாகியுள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராணி, பத்மநாபன் தம்பதியினர். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15) ஸ்ரீஜா (10) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து பிள்ளைகளை வீட்டில் விட்டு செல்வராணி கோபித்து கொண்டு வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து, காலை குழந்தைகளை பள்ளிக்கு தயார் படுத்தி அனுப்புவதற்காக வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்தனர். பத்மநாபன் வீட்டில் இல்லை. இதையடுத்து செல்வராணி சிங்காநல்லூர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க