• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வஉசி இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை

September 5, 2019 தண்டோரா குழு

செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வஉசி இழுத்த செக்கிற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சிறைத் துறையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது முக்கிய பங்காற்றிய செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ உ சிதம்பரனார் 1908 ம் ஆண்டு வெள்ளையரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சுமார் சுமார் 29 மாதங்கள் அங்கு சிறைவாசம் அனுபவித்த வ உ சி பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டார்.அதன் ஒரு பகுதியாக மாடுகளை கொண்டு இழுக்கப்படும் செக்கினை அவரது தோளில் சுமந்து இழுக்க வைத்து வெள்ளையர்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.பின்னர் கோவையிலிருந்து கேரள மாநிலம் கண்ணனூர் சிறைக்கு வ உ சி மாற்றப்பட்டார்.பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு அவர் இழுத்த செக்கு கோவை மத்திய சிறையில் பாதுகாத்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆண்டுகளாக கோவை மத்திய சிறை வளாகத்தில் மண்டபம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவரது 148 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவரது செக்கிற்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்,அகில இந்திய வ உ சி மக்கள் நல இயக்க தலைவர் ஆத்மா சிவகுமார்,சிறைத்துறை முன்னாள் டி ஐ ஜி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் அங்குள்ள வ உ சி திரு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து வ உ சி புகழ் பாடி முழக்கமிட்டனர்.

மேலும் படிக்க