• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் வளர்மதி உண்ணாவிரதம் என தகவல்

September 1, 2017 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவலில் உள்ள பொதுநலமாணவர் எழுச்சி இயக்கம் அமைப்பின் சேலம் மாவட்ட பொருப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவியுமான வளர்மதி பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுக்குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்பொதுநலமாணவர் எழுச்சி இயக்கம் தினேஷ் கூறுகையில்,

” சிறையில் வளர்மதி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவருடைய நிபந்தனைகள் , நெடுவாசல்,கதிராமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளை அழித்து வரும் நாசகர திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் கடலூர்,சிதம்பரம் மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களை உடனே கைவிட வேண்டும்.

சிறையில் தன்னை பார்க்க வருபவர்களை உளவுத்துறை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறது. இதற்கு காரணமான உளவுத்துறை மற்றும் அவர்களுக்கு சட்ட விரோதமாக தகவல்களை அளித்து வரும் சிறைத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

தன்மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எந்தவித நிபந்தனையின்றி உடனே திரும்பப் பெற வேண்டும். சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளான வாய்தாவிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதை திட்டமிட்டே காவல்துறை நிராகரித்து வருகிறது,வெளியே அனுப்பும் கடிதங்களை சென்றடையாமல் தடுத்தும் வருகிறது.

இதனை கண்டித்தும் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற கோரியும் அவர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்,” என்றார்.

மேலும் படிக்க