July 15, 2020
கோவை மதுக்கரை காவல் நிலைய காவலர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களை குறிவைத்த கோரானா காவல் துறையினரையும் விட்டுவைக்கவில்லை. போத்தனூர் துடியலூர் உள்ளிட்ட காவல் நிலைய காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட நிலையில் தற்போது மதுக்கரை சேர்ந்த ஏழு காவலர்களுக்கு கொரணா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பேட்ரோல் ரோந்து பணி பார்த்தது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இதனை தொடர்ந்து மதுக்கரை காவல் நிலையம் மூடப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்ப்படது. வேறு இடத்துக்கு மதுக்கரை காவல் நிலையம் தற்க்காலிகமாக மாற்றப்பட்டது.