• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மதுக்கரையில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

November 23, 2018 தண்டோரா குழு

கோவை மதுக்கரை வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

கோவை மதுக்கரை வனசரகத்திற்குட்பட்ட செங்கனூர், மோலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். கடந்த வாரத்தில் வனத்தை ஒட்டிய பகுதியில் சின்னராஜ் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, அங்கிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை பிடித்து கொன்று விட்டதாக புகார் எழுந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த ஆடு மற்றும் நாய், ஒன்றையும் சிறுத்தை கொன்றுவிட்டது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததை அடுத்து, அப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், மோளப்பாளையம் பகுதியில் அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். சிறுத்தை பிடிப்பட்டால் , தலைமை உயிர் பாதுகாவலர் ஒப்புதல் பெற்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க