• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில் புதிய அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

February 23, 2024 தண்டோரா குழு

கோயம்புத்துார், மசானிக் குழந்தைகள் மருத்துவ மையம், சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும், குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், சிறப்பான சிகிச்சை தரும் மருத்துவமனையாக துவக்கப்பட்டது.

கோயம்புத்துார் மசானிக் சொசைட்டி, 1982-ம் ஆண்டில் இதை துவக்கியது. தற்போது, 25 துறைகளுடன் 50 மருத்துவர்கள், ஆயிரக்கணக்கான குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றவர்களாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையில், ஆய்வகங்கள், கதிர்வீச்சியல் துறை, நோயாளிகளுக்கான ஆலோசனைகள், செவிலியர் பயிற்சி மற்றும் இஇஜி போன்ற வசதிகள் உள்ளன. இவை, இப்பகுதி மக்களுக்கு பெரும் பயன்மிக்கதாக உள்ளது.

சமுதாய நலனில் அக்கறை கொண்டு, பயனுள்ள பல வகைகளில் உதவி வருகிறது ரோட்டரி கிளப். இந்த முறை கோயம்புத்துார் மசானிக் மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கை அமைத்து தரவும், இடைக்கால நல மையம் ஒன்றையும் ஏற்படுத்தி தர முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கான மதிப்பீடு 1.26 கோடி ருபாயாக இருந்தது. சர்வதேச அளவிலான இரண்டு ரோட்டரி கிளப் சார்பில், இந்த உதவிகள் கிடைத்தன. புதிய நல மையத்திற்கான உதவியை கோவை மேற்கு ரோட்டரி கிளப், ஆர். ஐ. 3201 மாவட்டம், பென்டாங் ஆர். ஐ. மாவட்டம் 3300 ஆகியவை இணைந்து 56 லட்சம் ருபாய் மதிப்புள்ள 67,190 டாலர்களை வழங்கின. இந்த நிதியுதவியை, லீமா ரோஸ் மார்ட்டின் நேரடி பரிசாக வழங்கினார். இந்த திட்டத்திற்கு, கோவை மேற்கு, கோவை ஸ்பெக்ட்ரம், கோவை ஜெனித் ரோட்டரி கிளப்களை சேர்ந்த சந்தோஷ் பட்வாரி, சசிக்குமார், கைலாஷ் ஜெயின் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க அளவு நன்கொடைகளை வழங்கினர்.

இந்த அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவையான உபகரணங்களை, கோவை மிட்டவுன் ரோட்டரி கிளப் ஆர். ஐ. மாவட்டம் 3201, கோலாலம்புர் ரோட்டரி கிளப் மேற்கு மாவட்டம் 3300 ஆகியவை 73 லட்சம் ருபாய் மதிப்புள்ள 81973 டாலர்களை வழங்கினர். இதை, கொச்சவுசப் தாமஸ் சித்திலப்பள்ளி நேரடி பரிசாக வழங்கினார். மேலும், கோவை மிட்டவுன், கோவை கிழக்கு, கோவை கேலக்ஸி, கோவை வடக்கு மற்றும் கோவை சென்டினியல் ரோட்டரிகிளப் உறுப்பினர்கள் வழங்கினர். உறுப்பினர் ராஜசேகர் ஸ்ரீனிவாஸ் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க தொகையை வழங்கினார்.

திட்ட துவக்க விழாவில், கிரேண்ட் மாஸ்டர் அனிஷ்குமார் சர்மா, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட 3201 கவர்னர் விஜயக்குமார், தென்னிந்திய மண்டல கிரேண்ட் மாஸ்டர் மனோகரன், கோவை மசானிக் அறக்கட்டளையின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ரோட்டரி உறுப்பினர்கள், தலைவர்கள் நாராயணசாமி, நாகராஜன், தேவதாஸ் செர்னிச்சேரி, செயலாளர் கே. தமிழ் செல்வன், கோவை மேற்கு ரோட்டரி திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, மிட்டவுன் ரோட்டரி திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். துவக்க விழா மசானிக் மருத்துவமனை வளாகத்தில் இன்று (23.02.2024) நடந்தது.

மேலும் படிக்க