April 30, 2020
தண்டோரா குழு
கோவை மக்கள் சேவை மையம் சார்பில் ஒரு லட்சம் மாஸ்க்குகள் விநியோகத்திற்கான துவக்க விழா நடைபெறவுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசுடன் இனைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு தொண்டு அமைப்புகள் சார்பில் நோய் தொற்றை தடுக்கும் பாதுகாப்பு உடை,கிருமி நாசினி திரவம், முககவசம், கையுறை, போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மக்கள் சேவை மையம் சார்பில் ஒரு லட்சம் மாஸ்க்குகள் விநியோகத்திற்கான துவக்க விழா மே 1ம் நடைபெறவுள்ளது. விழாவில் 10 தன்ன்னார்வளர்களுக்கு மாஸ்க்குகள் விநியோகம் செய்து விழாவினைத் துவக்கி வைத்த பின்னர் முககவசங்கள் நேரடியாக வீடு வீடாக விநியோக்கப்படவிருக்கிறது.
இவ்விழாவில் விருந்தினராக கோவை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் இந்திரா ப்ரனேஷ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும், கோவை மக்கள் சேவை மையத்தின் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.