• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்களின் ஆதரவை கேட்டுக்கு ‘மிஷன் டிரீம் மிஸ் இந்தியா ‘ அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு தேர்வான கோவை அழகி !

June 15, 2020 தண்டோரா குழு

இயற்கையிலேயே பெண்கள் அழகென்றாலும், அவர்களது ‘மேக்கப்’ இன்னும் மெருகேற்றுகிறது. இளசுகளை மட்டுமின்றி, வயதானவர்களையும் திரும்பி பார்க்க வைக்கிறது. பெண்களையும், ‘மேக்கப்’பையும் எப்போதும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு, தன்னைத்தானே அழகாய் வைத்துக் கொள்வது, அழகு சார்ந்த விஷயங்களை தேடிச்செல்லும் குணம் இயல்பாகவே பெண்களுக்கு உண்டு. அந்த வகையில் கோவையை இளம் மாடல் அழகி ரியா போகாடியா ‘ மிஷன் டிரீம் மிஸ் இந்தியா ‘ என்ற தேசிய அளவிலான அழகி போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


இது குறித்து ரியா போகாடியா கூறுகையில்,

எனது சொந்த ஊர் கோவை தான். கோவை செல்வரத்தில் வசித்து வருகிறேன். தற்போது டெல்லி பப்ளிக் பள்ளியில் 12 வது படித்து வருகிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே பேஷன் டிஸைனர் ஆக வேண்டும் என்பதே என கனவு. இதற்காகவே தயாராகி வருகிறேன்.
பரதநாட்டியமும் முறைப்படி கற்றுக்கொண்டு வருகிறேன்.நான் 14 வயதில் இருந்தபோது, மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன். மீரக்கிள் மீடியா கோயம்புத்தூர் மாடலிங் போட்டியில் பங்கு பெற்று “The photogenic kid Coimbatore” என்ற பட்டத்தை வென்றேன். என்னைப் பொறுத்தவரை, மாடலிங் என்பது அழகான ஆடைகளைப் பற்றியது மட்டுமல்ல, மேடைக்கு முன்னாள் நீங்கள் காண்பிக்கும் நம்பிக்கையையும் தனிப்பட்ட சுயத்தையும் பற்றியது.

நான் தற்போது மிஷன் டிரீம் மிஸ் இந்தியா என்ற தேசிய அளவிலான அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளேன். மிஷன் டிரீம் மிஸ் இந்தியா போட்டியில் இறுதி வீரராக தேர்வு பெற இரண்டு சுற்று தேர்வுகள் இருந்தன. மிஷன் டிரீம் மிஸ் இந்தியா 2020 இறுதிப் போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பயணம் மிக எளிதானது அல்ல. இந்தியா முழுவதிலும் உள்ள 15,000 மற்றும் அதற்கு மேற்பட்ட போட்டியாளர்களில், நான் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 40 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இறுதி போட்டி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் செப்டம்பரில் நடைபெற்றவுள்ளது.

நான் இந்த பட்டத்தை வென்றால் எனது தொழில் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், எனது கோவை நகரத்திற்கு அது பெருமை சேர்க்கும். ஆகையால் கோவை மக்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும். எனது சமூக ஊடக இன்ஸ்டாகிராம் பயோ, https://instagram.com/_.riyaa25._?igshid=1d992zazqumvs
இல் உள்ள இணைப்பு மூலம் எல்லோரும் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கோயம்புத்தூர் பெண்ணுக்கு உங்கள் அதிகபட்ச ஆதரவைக் காட்டுங்கள். நமது கோம்பத்தூர் நகரத்தை பெருமைப்படுத்த எனக்கு உதவுங்கள். உங்கள் ஒவ்வொரு வாக்கு எனக்கு அவசியம் என்றார்.

மேலும் படிக்க