• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் “வணக்கம் கோவை” செயலி அறிமுகம் !

December 22, 2018 தண்டோரா குழு

கோவை மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வணக்கம் கோவை” செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டது. எந்த பொருட்களை வாங்க வேண்டுமாலும் முதலில் நாம் ஆன்லைனில் தான் பார்ப்போம். அந்த அளவிற்கு எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டது. இதற்காகவே பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களும் போட்டிபோட்டு வாடிக்கையாளர்ககளை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கோவையில் தொழில் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஆன்லைன் வழியாக அவரவர் பொருட்களை கோவை மக்களுக்கு எளிதாக சென்றடைய ஓர் புதிய முயற்சியாக வணக்கம் கோவை” செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மற்றும் வணக்கம் கோவை இணையதளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலியை ஏ.இ.எஸ். டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் பாலாஜி ராஜு, கோவை போஸ்ட் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் வித்யா ஸ்ரீ தர்மராஜ், மருத்துவர்கள் பாலாஜி, கதிர், துருவ் எண்டர்பிரைசஸின் இயக்குநர் துருவ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இது குறித்து வணக்கம் கோவை செயலியின் நிறுவனர் ஜெகதீஷ் சந்திரன் கூறுகையில்,

கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மக்களும் எளிதில் பயன்பெறும் வகையில் இந்த வணக்கம் கோவை செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் வெறும் 20 ரூபாய் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து விளம்பரப்படுத்தலாம். மேலும், இந்த செயலியில் இன்றைய செய்தி, சினிமா செய்தி, மருத்துவக் குறிப்புகள் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கோவை மக்கள் தங்கள் கையில் உள்ள தொலைபேசி மூலம் வணக்கம் கோவை என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கோவையில் எது எங்கே? என்ன விலை? போன்ற தகவல்களை அறியலாம். இதுமட்டுமின்றி விற்பனையாளரின் சலுகைகளை நேரடியாக அவர்களிடமே விவாதித்து பேரம் பேசி வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம் என கூறினார்.

மேலும் படிக்க