May 23, 2019 தண்டோரா குழு
கோவை மக்களவை தொகுதியில் 6 வது சுற்றிலும் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் உள்ளார்.
17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் கோவையை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கோவை மக்களவை தொகுதியின் 6 வது சுற்று முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க -சி.பி ராதாகிருஷ்ணன் – 1,05,008
சி.பி.எம்- பி.ஆர்.நடராஜன் – 1,45,732
ம.நீ.ம -மகேந்திரன் – 37,935
அ.ம.மு.க -அப்பாதுரை – 10,545
நாம்தமிழர் -கல்யாண சுந்தரம் – 15,734
நோட்டா – 6,236
சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 40,724 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.