• Download mobile app
19 Mar 2024, TuesdayEdition - 2960
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை போலீசார் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – கோவை ஆணையர்

August 23, 2019 தண்டோரா குழு

கோவை போலீசார் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் கூறியுள்ளார்.

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து,சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

6 பயங்கரவாதிகள் கோவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது; நகரின் முக்கிய இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்.கோவையில் வணிக வளாகங்கள், கோவில்களில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. கோவை முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என தேடி வருகிறோம்.தீவிரவாதிகள் குறித்த எந்த புகைப்படமும் கிடைக்கவில்லை. கோவை போலீசார் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை. தேவையில்லாத பதற்றம் வேண்டாம், போலீசார் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் எனக் கூறினார்

மேலும் படிக்க