June 22, 2020
தண்டோரா குழு
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், கடைகளில் தனிமனித இடைவெளி, கட்டாய முகக்கவசம் என கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இதில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.இதனால் தொடர்ந்து அரசு அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வந்த டி-மார்ட் பல்பொருள் அங்காடியில் விதி மீறல் நடப்பதாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா, வருவாய்த்துறை அதிகாரிகள், போத்தனூர் போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியாமல் வாடிக்கையாளர்களை அனுமதித்தால் டி- மார்ட் பல்பொருள் அங்காடிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து நிறுவன ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.