• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்

April 24, 2020 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரன் உத்திரவின் பேரில் கோவை போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவ பணியாளர்கள், போலீஸாருக்கு தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர தெற்கு உதவி கமிஷர் செட்ரிக் இனுவேல் உள்ளிட்ட போத்தனூர், குனியமுத்தூர்,ராமநாதபுரம்,
போத்தனூர் இருப்புப்பாதை போலீஸார் 75 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,கொரானா தொற்று மேலும் பரவாமல் இருக்க அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தும் பணியில் சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்திரவின் பேரில் கோவை போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டது.
மேலும் வேறு இடத்தில் இருந்து போத்தனூர் காவல் நிலையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க