• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஆ.ராசாவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

April 13, 2019 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூந்து நிறுத்தத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர் ஆ.ராசா மற்றும் கோவை பாராளுமன்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உயிர்தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் மோடி. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் கோவையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் சிறு மற்றும் குருந்தொழில்கள் நலிவுற்றதால் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வடி 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயிருக்கின்றனர்.

மோடி கார்ப்ரேட் கம்பெனிக்காகவே வேலை செய்கிறார் 23 பேர் சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடு சென்றுள்ளனர். மேகதாது, முல்லைப் பெரியார் அணை கட்ட அனுமதி வழன்கியது, தென் மவட்டங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்து வருகிறது.இதை அதிமுக அரசு தட்டிக்கேட்காது காரணம் முதலமைசர், அமைச்சர் ஆகியோர் ஊழலில் சிக்கித்தவிக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டே எடப்படி பழனிசாமி 13 பேரை படுகொலை செய்துள்ளார் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிரேன் என்றார்.காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் நிட் தேர்வை ரத்து செய்வதாக கூறியுள்ளனர். அது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க