• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பெங்களூர் இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

June 8, 2018 தண்டோரா குழு

கோவை பெங்களூர் இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

கோவை பெங்களூர் இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜன் கோகெயின் மற்றும் மத்திய கப்பல் மற்றும் நிதி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று(ஜூன் 8) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்ஷிஸ்தா,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ்,நாகராஜன் மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ரயில் கோவையில் இருந்து காலை 5.45-க்கு புறப்பட்டு,திருப்பூர்,ஈரோடு,சேலம் வழியாக மதியம் 12.40-க்கு பெங்களூர் சென்றடையும்.இதேபோல்,பெங்களூரில் இருந்து மதியம் 2.15-க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

“பிரதமர் மோடியின் அரசு தமிழகத்திற்கு நிறைய நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறது. கோவையிலிருந்து பெங்களூரூக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து இந்த குறுகிய காலத்தில் தமிழகத்தின் முதல் டபுள் டக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.மேலும்,தமிழகத்தில் இருந்து 43 புதிய ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. தென்னக இரயில்வேயில் 388 கீ.லோ மீட்டர் தூரம் மின் மயமாக மாற்றப்பட்டுள்ளது.கோவை மாநகரில் பஸ்போர்ட் அமைக்க இடம் பார்க்கப்பட்டுள்ளதாகவும்,கோவையை சுற்றி ரிங் ரோடு அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ரூ 700 கோடி வழங்கியுள்ளது அதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது,” என்றார்.

மத்திய இணை அமைச்சர் ராஜன் கோகெயின் பேசுகையில்,

“தென்னக ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உதய் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல திட்டங்களை சிறப்பாக முடித்துள்ளோம்.கோவை வடக்கு ரயில்நிலையம் மேம்படுத்தப்படும் என்றும்,மதுரை செல்லும் ரயில்கள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என்றார்.

மேலும் படிக்க