• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புரோசோன் மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்ககொண்ட நடிகர் புகழ்

November 29, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் – சத்தி ரோடு, சரவணம்பட்டியில் அமைந்துள்ளது புரோசோன் மால். இங்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை பிளாக் பிரைடே விற்பனை நடைபெற்று வருகின்றது. புரோசோன் மாலில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய பிராண்டகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி தர உள்ளார்கள்.

மேலும் இங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் சாம் விஷால் லைவ் பேண்ட் காம்பெடிஷன் நிகழ்ச்சியும், பிரபல பேஷன் ஷோ கலைஞர் சுருதிஹாவின் பேஷன் ஷோ நிகழ்ச்சியும், பிரபல திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் புகழ் பங்குபெறும் டான்ஸ் போட்டி மற்றும் காமெடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் புகழ் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

புரோசோன் மாலுக்கு கலை நிகழ்ச்சியை காணவும் தள்ளுபடியில் பொருட்களை வாங்கவும் கூட்டம் அலைமோதுகின்றது குறிப்பிடத்தக்கது. இந்த பிளாக் பிரைடே விற்பனை டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும்.

மேலும் படிக்க