• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

April 26, 2019 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 400 எம்.பி.ஏ. மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

கோவை,அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பி.எஸ்.ஜி நிறுவனங்களின் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் பேசிய கல்லூரியின் இயக்குனர் விஜயா, இன்று கல்லூரி படிப்பை முடித்து வாழ்க்கையை துவங்கும் மாணவர்கள் இனி வரும் பல்வேறு கட்டங்களில் எதிர் கொள்ளும் சவால்களில் வெற்றி பெற்று முன்னேற வாழ்த்துவதாக தெரிவித்தார்.

விழாவில்அமெரிக்காவின் டொலீடோ பல்கலைக்கழகத்தின் தலைவரான டாக்டர் ஷரோன் கேபர்,மற்றும் டீன் முனைவர் அன்னே எல். பாலாஸ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் டொலீடோ பல்கலைகழக மாணவ,மாணவியர்களுக்கும் 220 பேருக்கும் மற்றும் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் 180 பேர் என மேலாண்மை கல்லூரியில் பயின்ற 400 எம்.பி.ஏ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கப்பட்டது.

விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க