• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோஜா தினம் அனுசரிப்பு

September 22, 2020 தண்டோரா குழு

உலக ரோஸ் தினமானது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெலிண்டா ரோஸ் என்ற 12 வயது சிறுமி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு,கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு சார்பில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் நோயாளிகளுக்கு ரோஜா மலரை கொடுத்து குணமடைய வாழ்த்து சொல்லும் ரோஜா தினம் 2020 இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதனை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

புற்றுநோய் சிகிச்சை பிரிவின் டாக்டர்கள் மதுலிகா விஜயகுமார்,ரூமேஷ் சந்தர், பாஸ்கர் பாண்டியன் ராவ்,புற்றுநோய் துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் புற்றுநோய் நோயாளிகளுக்கு ரோஜா தினத்தினை முன்னிட்டு ரோஜா பூக்கள்,பழங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்கள் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க