• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் வானவில் ரவியின் படைப்புலகம் குறித்த கருத்தரங்கம்

January 8, 2024 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் ஆங்கிலத்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் பாலக்காடு, கேரளா இணைந்து வானவில் கே ரவியின் படைப்புலகம் என்னும் பொருண்மையில் 117 ஆவது கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் பி.இளமாறன் வரவேற்புரை வழங்கினார்.கல்லூரி முதல்வர் முனைவர் து.பிருந்தா தலைமையேற்று தலைமை உரையில் வாசிப்பின் சிறப்பினையும் படைப்பாக்கத் திறன் பற்றியும் உரையாற்றினார். அரவிந்த் கண் மருத்துவமனை மூத்த மருத்துவர் கல்பனா நரேந்திரன் தொடக்க உரையில் ‘வாசிப்பின் வசந்த காலம் கல்லூரிப்பருவம் தான் ‘ என்று எடுத்துரைத்தார்.

கருத்தரங்கின் மைய உரையை பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் கு.அ ராஜாராம் பேசுகையில் பாரதி, கண்ணாதாசன் போன்ற ஆளுமைகளின் வரலாறுகளை நேர்த்தியாக எடுத்துரைத்தார்.கல்லூரிச் செயலர் முனைவர் தி. கண்ணையன், கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் பா. சம்பத்குமார் மற்றும் பாரதி பாசறைத் தலைவர் மோகன் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வானவில் கே ரவி அவர்களின் படைப்புலகம் சார்ந்த கட்டுரைகளைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்கள் வழங்கினர்.சிறப்பு விருந்தினராக மேனாள் விரிவுரையாளர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் முனைவர் எம் எஸ் லட்சுமி (இணைய வழியிலும்), இயற்றமிழ்ச்சுடர் திரு மரபின் மைந்தன் முத்தையா, முனைவர் இரா.இளவரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.

வானவில் கே.ரவி தனது ஏற்புரையில்,

என் படைப்புகளை மறுவாசிப்பு செய்வதற்கான வாய்ப்பாக இக்கருத்தரங்கு அமைந்ததாகவும்,இயற்கையே கவிதையின் காதலனாகத் திகழ்ந்த தன்மையினைக் குறித்து உரை நிகழ்த்தினார்.தமிழ்த்துறைத் தலைவர் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க