• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையின் புதிய சஞ்ஜீவனி திட்டம்

July 1, 2020 தண்டோரா குழு

பிஎஸ்ஜி மருத்துவமனையின் சார்பாக மருந்து மாத்திரைகளை நீங்கள் இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ள புதிய சஞ்ஜீவனி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரனா வைரஸ் தொற்றினால் மக்கள் வெளியே வர முடியாமல் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இதற்கு தகுந்தார் போல் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை புதிய சஞ்சீவினி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தினர்.இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலமாக அல்லது போன் மூலமாக ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் Dr.J.S.புவனேஸ்வரன் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பி எஸ் ஜி மருத்துவமனை மக்கள் நலனிற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த சஞ்ஜீவனி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி பி எஸ் ஜி மருத்துவமனை மருந்தகத்தில் ரூபாய் 1000ற்கு மேல் மருந்து, மாத்திரைகள் ஆர்டர் செய்பவர்களுக்கு இலவசமாக கூரியர் மூலமாக உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் பெறப்படாது.

ரூபாய் 1000ற்கு கீழே மருந்து மாத்திரை ஆர்டர் கொடுப்பவர்களுக்கு,மருந்து மாத்திரை கட்டணத்துடன் கூடுதலாக கூரியர் கட்டணம் பெறப்படும்.இந்த சஞ்ஜீவனி திட்டம் இந்தியா முழுமைக்குமான ஒரு திட்டமாகும். நம் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இந்த திட்டத்தின் மூலமாக உங்களது மருந்து மாத்திரைகளை உங்கள் இல்லங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் 8220333747 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் அல்லது குறுஞ்செய்தி அல்லது போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் இது கோவையில் முதன்முறையாக
பி எஸ் ஜி மருத்துவமனை இந்த சஞ்ஜீவனி திட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க