• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாராதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதி முன்பு மாணவிகள் போராட்டம்

August 30, 2022 தண்டோரா குழு

கோவை பாராதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதியில் மாணவிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, பல்கலை. நுழைவு வாயில் முன் மாணவிகள் சாப்பாட்டு தட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மருதமலை பகுதியில் பாரதியார் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழக மகளிர் விடுதியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்தநிலையில், மகளிர் விடுதியில் வழங்கும் உணவு தரமற்றதாக உள்ளதாகவும், அவ்வப்போது உணவில் புழு, பூச்சிகள் கிடப்பதாகவும் புகார் எழுந்தது. இதேபோல், விடுதியில் தண்ணீர் சரிவர வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,இன்று காலை மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி மாணவிகள் தரமான உணவை வழங்கக்கோரி சாப்பாடு தட்டு மற்றும் வாளிகளுடன் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது,விடுதி கேன்டீனில் வழங்கப்படும் உணவில் சில சமயங்கள் புழுக்கள் இருப்பதாவும்,சில நேரங்களில் கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாகவும் குற்றம்சாட்டினர். எனவே விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவியருக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வடவள்ளி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி, சுகாதாரமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில், மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விடுதி மாணவிகள் போராட்டம் காரணமாக பாரதியார் பல்கலை.யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க