• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியார் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் – கோவை நீதிமன்றம்

February 12, 2018 தண்டோரா குழு

லஞ்ச புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  கணபதி பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உதவியதாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணை கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அப்போது, இம்மனு மீதான விசாரணையை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தி வைத்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக கணபதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, லஞ்ச புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   

மேலும் படிக்க