• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் (மவுண்டன் டெர்ரைன் பைக்) சைக்கிள் சாம்பியன்ஷிப் 2021 பந்தயம் !

September 19, 2021 தண்டோரா குழு

கோவை நேரு கல்வி குழுமம் மற்றும் கோவை பெடலர்ஸ் அமைப்பின் சார்பில் கோயம்புத்தூரில் மேடு பள்ளம் மற்றும் சமதள போன்ற மைதானத்தில் சைக்கிள் ஓட்டும் (மவுண்டன் டெர்ரைன் பைக்) சாம்பியன்ஷிப் பந்தயம் இன்று (செப்டம்பர் 19, 2021) நடைபெற்றது.

இது குறித்து கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி செயலாளர் மற்றும் கோவை பெடலர்ஸ் அமைப்பின் தலைவருமான டாக்டர். பி. கிருஷ்ண குமார் கூறியதாவது :-

இன்று நடைபெற்ற பந்தயமானது கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள பாலத்துறையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் இன்று காலை 6.30 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் 10, 14 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவினர்களாக மாணவ மாணவியர்கள் பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றன.இந்த போட்டியில் மொத்தம் 200 மாணவ மாணவியர்கள் அவர்களின் பெற்றோர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள்.

பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பற்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ்கள், டி-சர்டுகள் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு வழி முறைகள் பின்பற்றி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்கள் இனி வரும் நாட்களில் நடைபெறும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த சைக்கிள் பந்தயத்தை கோயம்புத்தூர் ஐ.என்.எஸ். அக்ரானியின் கமான்டிங் அதிகாரி, கமோடோர் அசோக் ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்தியன் இரயில்வேயின் தேசிய தடகள பயிற்சியாளரும் முன்னாள் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவருமான கே. எஸ். முகமது நிஜாமுதீன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவிற்கு நேரு கல்வி குழமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளரும் கோவை பெடலர்ஸ் அமைப்பின் தலைவருமான டாக்டர். பி. கிருஷ்ண குமார் முன்னிலை வகித்தார். கோவை பெடலர்ஸ் அமைப்பின் செயலாளர் ஆர். எஸ். விக்னேஷ் குமார் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

போட்டியில் மாணவியர் பிரிவில் 8 வயதுக்குட்பட்டோருக்கான முதல் போட்டியில் ஜி. ரக்ஷிதா முதலிடத்தையும், நிவியா கிருஷ்ணன் இரண்டாமிடத்தையும், முகில் நிலா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 10 வயதுக்குட்பட்டோருக்கான முதல் போட்டியில் எஸ். லக்ஷா முதலிடத்தையும், தக்ஷிதா இரண்டாமிடத்தையும், ஜுலியானா ஜோசப் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான கே. ஸ்மித்தி முதல் இடத்தையும், இரண்டாவது இடத்தை எஸ். சௌபார்நிக்காவும், மூன்றாவது இடத்தை வி.பி. அனிஷா நாயர் ஆகியோர் பிடித்தனர். 18 வயதுக்குட்பட்டோருக்கான முதல் போட்டியில் எஸ். சுவேதா முதலிடத்தையும், எம். சுபஸ்ரீ இரண்டாமிடத்தையும், தன்யா தர்ஷினி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

மாணவர் பிரிவில் 8 வயதுக்குட்பட்டோருக்கான முதல் போட்டியில் என். நிரன் ராஜ் முதலிடத்தையும், சூர்யவர்த்தன் இரண்டாமிடத்தையும், தருன் விக்ரம் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 10 வயதுக்குட்பட்டோருக்கான முதல் போட்டியில் நிரன்ஜன் தேவராஜன் முதலிடத்தையும், பிசால் ராஜ் இரண்டாமிடத்தையும், எஸ்.எ. ஸ்ரீமன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான முதல் போட்டியில் எஸ். ரமணி முதல் பரிசையும், பிரானேஷ் இரண்டாமிடத்தையும், பி. ஆதித்யா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 18 வயதுக்குட்பட்டோருக்கான முதல் போட்டியில் ஜெ.கே. ஜெனிஸ் முதலிடத்தையும், ஜஸ்டஸ் பாபி ஜெயக்குமார் இரண்டாமிடத்தையும், எம். ஸ்ரீஹரி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

மேலும் விழாவில் தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பில் சென்னை ஆவடி சூட்டிங் ரேன்ஜ் வளாகத்தில் நடைபெற்ற 46வது துப்பாக்கி சுடதல் பேட்டியில் கோவை நேரு ஏர் ரைப்பிள் அகாடிமியின் சார்பில் கலந்து கொண்டு 50 மீட்டர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்ற எஸ். சுpவக்குமார், வெள்ளி பதக்கம் வென்ற பி.வி. கோகுல் ராஜன், ஆர். அனுபிரபா, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற எம். வினோத்குமார் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற எம். தீப்தி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க